நெல்லை முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. நெல்லை சந்திப்பு பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோவிலில் நேற்று கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 11 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் நேற்று கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.