பதிவு செய்த நாள்
05
நவ
2013
10:11
தூத்துக்குடி: திருச்செந்தூரில், கந்த சஷ்டி விழாவின் இரண்டாம் நாளான நேற்று, தங்கதேரில் எழுந்தருளி, ஜெயந்திநாதர் வீதி உலா வந்தார். திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா, நேற்று முன் தினம், யாக சாலை பூஜையுடன் துவங்கியது. பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து, பச்சை ஆடை உடுத்தி, சஷ்டி விரதத்தை துவக்கினர். இரண்டாம் நாளான, நேற்று பகல், 12:45 மணிக்கு, தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளினார். "வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடலுடன், சண்முக விலாசம் சென்றடைந்தார். மாலை, 4:00 மணிக்கு, திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில், ஜெயந்திநாதருக்கு ஆராதனை நடந்தது. தங்க ரத்தில் வீதி உலா வந்து பின், கோயில் சென்றடைந்தார்.