பதிவு செய்த நாள்
08
நவ
2013
11:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று மாலை 6 முதல் 6.30 மணிக்குள் சூரசம்ஹாரலீலை நடக்கிறது.கோயிலில், நவ., 3ல் துவங்கிய கந்த சஷ்டி திருவிழாவின் 5ம் நாளான நேற்று, வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று சூரசம்ஹாரலீலை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, சம்ஹார அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்திலும், வீரபாகு, வெள்ளை குதிரை வாகனத்திலும் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் முன், லீலை நடக்கிறது. நாளை காலை சட்டத் தேரோட்டமும், மாலையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி முன்பு தயிர் சாதம் படைக்கப்பட்டு, பாவாடை நைவேதன தரிசனமும் நடக்கும்.மாவிளக்கு விரதம்: கந்த சஷ்டி ஆறுநாட்கள் விரதமிருக்கும் பக்தர்கள், நாளை விரதத்தை முடிப்பர். முன்னதாக, திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று, மாவு விரதம் மேற்கொள்வர். இதற்காக நேற்று பச்சரியில் மாவு இடித்து, அதில் வெல்லம், சுக்கு, ஏலக்காய் சேர்த்து மாவு தயார் செய்தனர்.