பதிவு செய்த நாள்
11
நவ
2013
02:11
சூரியனை ஆட்சி நாயகனாக கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு ஆகியோர் நன்மை தந்து கொண்டிருக்கிறார்கள். எனவே சிறப்பான பலனை காணலாம். புதன் ராசிக்கு 3 ல் உள்ளார். அவரால் பகைவர் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.நவ.28ல் புதன் விருச்சிகத்திற்கு செல்கிறார். அதன்பின் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சூரியன் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான விருச்சிகத்தில் இருப்பதால், பெண்களிடம் விரோதம் ஏற்படும். உடல் நலம் பாதிக்கப்படும். செவ்வாயால் மாத தொடக்கத்தில் முயற்சியில் தடைகள் வரலாம். நவ.30ல் கன்னி ராசிக்கு செல்கிறார். வீட்டில் திருட்டு போக வாய்ப்புண்டு. வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்கவும். சுக்கிரன் டிச.3 வரை தனுசில் இருப்பதால் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய கிளைகள் துவங்கும் யோசனை வலுப்பெறும். பணியாளர்கள் இடமாற்றம், சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகளை பெறுவதற்கு இடமிருக்கிறது. அதன் பிறகு சுக்கிரன் மகரத்திற்கு செல்வதால் முயற்சியில் தடை ஏற்படும். வரவு செலவு விஷயங்களை நேரடியாகக் கண்காணிப்பது நன்மை தரும். செவ்வாய், சூரியன், கேது ஆகியவை சாதகமாக இல்லாவிட்டாலும் மற்ற கிரகங்கள் பலம் பெற்று உள்ளன. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் லாபம் காண்பர். டிச.4 க்குப்பிறகு விவாதம் செய்வது கூடாது. அரசியல்வாதிகள் மகிழ்ச்சியோடு இருப்பர். தலைமையுடன் இணக்கம் ஏற்படும். விவசாயிகளுக்கு செலவு அதிகமாகும் பயிரை தவிர்ப்பது நல்லது. புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்கவும். விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம் மாணவர்கள் வளர்ச்சி காண்பர். தேர்வு சிறப்பாக அமையும். புதனால் நவ.28க்கு பிறகு கல்வி வளம் பெருகும். போட்டியில் வெற்றி காணலாம்.பெண்கள் பிள்ளைகளால் முன்னேற்றம் காணலாம். நவ.11,12 தேதிகளில் வயிறு தொடர்பான உபாதை வரலாம்.
அதிர்ஷ்ட எண்: 1,7 நிறம்: மஞ்சள்,நீலம்
நல்ல நாள்: நவ.18,19,20,21,22,25,26,27,30,டிச.1,6,7,8, 9,10, 15
கவன நாள்: டிச.11,12 சந்திராஷ்டமம்
வழிபாடு: வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். கேது சாதகமற்ற இடத்தில் இருப்பதால் துர்க்கை வழிபாடு நடத்துங்கள். செவ்வாய்க்கு துவரை படைத்து வணங்கி வாருங்கள்.