பதிவு செய்த நாள்
11
நவ
2013
02:11
குருபகவானை ஆட்சி நாயகனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
சூரியன் 12ம் இடமான விருச்சிகத்தில் இருப்பதால் பொருள் விரயம் ஏற்படும். தொழிலில் நஷ்டம் உருவாகலாம். பணியில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. ஆனால், கல்விகாரகன் புதன் தற்போது துலாமில் சனி,ராகுவோடு இணைந்திருக்கிறார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். நவ.28ல், புதன் 12ம் இடமான விருச்சிகத்திற்கு வருகிறார். அப்போது எதிரிகளால் தொல்லை வரலாம். முயற்சிகளில் பின்னடைவைச் சந்திக்கும் நிலை உருவாகலாம். உடல்நிலை பாதிக்கலாம்.பூமிகாரன் செவ்வாய் நவ.30ல் கன்னி ராசிக்கு வருகிறார். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை. சுக்கிரன் உங்கள் ராசியில் இருக்கிறார். அது சிறப்பான இடம். பெண்களால் சுகம் கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். டிச.4ல்தேதி மகரத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம்பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். வியாபாரிகளுக்கு அர” சலுகை கிடைக்கும். முக்கிய கிரகங்களில் குருபகவான்7ம் இடமான மிதுனத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபங்களையும் தருவார். மேலும் சனிபகவானும், ராகு பகவானும் சாதகமான நின்று நன்மை தந்து கொண்டிருக்கிறார்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்க உறுதுணையாக இருப்பார்கள். கலைஞர்கள் சிறப்பான பலனைக் காணலாம். அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கத்திற்கும் குறை இருக்காது. மாணவர்களின் வளர்ச்சி வளர்முகமாக இருக்கும். நவ.28 க்கு பிறகு சற்று சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகளுக்கு கால்நடை வகையில் அதிக வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க தாமதமாகும். பெண்கள் நகை வாங்கலாம். கணவரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.
அதிர்ஷ்ட எண்: 8,9 நிறம்: மஞ்சள், நீலம்
நல்ல நாள்: நவ. நவ.18, 19,20,21,22, 28, 29,30, டிச.1, 4,5, 8,9,10, 15.
கவன நாள்: நவ.23, 24 சந்திராஷ்டமம். கவனம்.
வழிபாடு: செவ்வாயன்று முருகன் கோயில் சென்று ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். சூரிய வழிபாடு செய்யலாம்.