பதிவு செய்த நாள்
11
நவ
2013
02:11
சனி பகவானை ஆட்சி நாயகனாக கொண்ட மகர ராசி அன்பர்களே!
இந்த மாதம் பிற்பகுதியில் கூடுதல் பலன்கள் கிடைக்கும். கடந்த மாதம் நிலவிய பின்தங்கிய நிலை மறைந்து முன்னேற்றத்துக்கு வழிவகை காணலாம்.சுக்கிரன் தற்போது 12ம் இடமான தனுசில் உள்ளார். இதனால் காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம். டிச.4ல் உங்கள் ராசிக்குவருகிறார். இது சிறப்பான இடம்.பெண்களால் சுகம் கிடைக்கும். பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.கல்வி காரகனான புதன் தற்போது 10-ம் இடமான துலாமில் இருக்கிறார். இது சிறப்பான இடம். நவ.28ல் விருச்சிகத்திற்கு வருகிறார். 11-ம் இடமான அங்கும், அவர் பல்வேறு நன்மைகளை தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். எடுத்த செயல் வெற்றி அடையும்.பூமிகாரகன் செவ்வாய் 8ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. உஷ்ண, பித்தம், மயக்கம் உபாதைகள் வரலாம். அவர் நவ.30ல் கன்னிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. முயற்சிகளில் தோல்வி ஏற்படும். பொருள் நஷ்டம் வரலாம்.சூரியன் 11ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இதனால் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும்.சனிபகவான் துலாம் ராசியில் உச்சம்பெற்று இருந்தாலும் சாதகமாக காணப்படவில்லை. அவரோடு இணைந்திருக்கும் ராகுவும் நன்மை தரமாட்டார். ஆனால், அந்தக் கிரகங்கள் மீது குருவின் பார்வை படுவதால் அவர்கள் கெடுபலனை தரமாட்டார்கள். கேதுவால் சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம். எனவே முகம் தெரியாத நபரிடம் எச்சரிக்கையாக பழகவும். கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ் கிடைக்க சற்று தாமதம் ஆகலாம். அரசியல்வாதிகளுக்கு பெண்களால் பொருள் சேரும். மாணவர்களுக்கு காலத்தை பயன்படுத்தி முன்னேறுவது உங்கள் கையில்தான் உள்ளது.விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் யோகம் விரைவில் வரும். பெண்கள் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.
அதிர்ஷ்ட எண்:1,3 நிறம்: செந்தூரம், பச்சை.
நல்ல நாள்: நவ.20.21.22.23.24, 30,டிச.1,2,3, 6,7,11,12
கவன நாள்: நவ.25,26,27 சந்திராஷ்டமம். கவனம்.
வழிபாடு: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். செவ்வாய்க்கிழமை முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.