சுவாமிமலை: சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நவ. 17-ம் தேதி இரவு தீபக்காட்சி நடைபெற உள்ளது. சுவாமிநாத சுவாமியை கிருத்திகை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிப்பட்டு வருகின்றனர். இக்கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா வரும் 17-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று இரவு 7 மணிக்கு தீபக்காட்சி நடைபெறுகிறது.