வள்ளலார் கோவிலில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2013 10:11
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு நேற்று மாலை காஞ்சிகாமகோடி பீட õதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை புரிந்தார். காஞ்சி சங்கரவித் யாலயா மெட்ரிக் பள்ளிக்கு வருகைபுரிந்த சுவாமிகளுக்கு பள்ளி ஆட்சி மன் றக்குழு தலைவர் குஞ்சிதபாதம், தாளாளர் வெங்கட்ராமன் தலைமையில் பூ ர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் களுக்கு அருளாசி வழங்கினார். இதில் பள்ளி முதல்வர் புவனேஸ்வரி, ஆட் சி மன்றக்குழு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வ தானேஸ்வரர்(வள்ளலார்) கோவிலுக்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ö சன்றார். அங்கு கோவில் அர்ச்சகர் சுப்பிரமணிய சிவாச்சாரியார், கண்காணி ப்பாளர் நடராஜன், சீத்தாராமன் ஆகியோர் பூர்ணகும்ப மரியாதையுடன் வர வேற்பு அளித்தனர். தொடர்ந்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வினாயகர், சுவாமி அம்பாள், மேதாதட்சணாமூர்த்தி சன்னதிகளில் வழிபாடு மேற்கொண்டார். இதில் கா விரி தீர்த்தயாத்திரை கமிட்டி தலைவர் முத்துகுமரசாமி உள்ளிட்டபலர் கல ந்து கொண்டனர். இன்று (13ம் தேதி) காலை 5:30 மணியளவில் காவிரி துலாக் கட்டத்தில் ஜெ யேந்திர சரஸ்வதி சுவாமிகள் புனித நீராடி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகி றார். பின்னர் மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டு கும்பகோணம் சங்கர மட த்திற்க செல்கிறார்.