ராமேசுவரம் கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள தூண்கள் சீரமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2013 10:11
ராமேசுவரம்: கோவிலின் மகா கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ளது. பிரசித்தி பெற்ற 3–ம் பிரகாரம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு அங்குள்ள 1,212 தூண்களிலும் புதிதாக வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. சுவாமி–அம்பாள் சன்னதியில் உள்ள கருங்கற்களால் ஆன தூண்களைக் கொண்ட பிரகாரத்திலும் பணிகள் நடந்து வருகிறது. இகோவிலில் பழமை வாய்ந்த கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ள முதல் பிரகாரத்தில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுவாமி–அம்மன் சன்னதி பிரகாரத்தில் உள்ள அனைத்து தூண்களிலும் தூசி, அழுக்குகள் முழுமையாக நீக்குவதற்காக முதல் கட்டமாக ரசாயனம் கலந்த வர்ணம் அடிக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.