பதிவு செய்த நாள்
16
நவ
2013
10:11
பாலக்காடு: கேரள மாநிலம், கல்பாத்தி, விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது.திருவிழாவின், முதல் நாளில், விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் சுவாமி, சுப்பிரமணியர், கணபதி சிலைகள் அலங்கரிப்பட்ட தேரில், நான்கு வீதிகளிலும் உலா வந்தன. இரண்டாம் நாளான நேற்று, மந்தக்கரை, மகா கணபதி கோவில் தேர், பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் தேரோட்டம், செண்டைமேள தாளத்துடன் வீதிகளில் வலம் வந்தன. இன்று, சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோவில் தேர் உலா துவங்குகிறது. மாலை, 6:00 மணிக்கு, விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் அருகே, ஆறு தேர்களின் சங்கமம் நடக்கிறது.