நெல்லிக்குப்பம்: வாழப்பட்டு விநாயகர் கோவிலில் புதிய உற்சவர் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்தது. கோவிலில் உற்சவர் விநாயகர் சிலை இல்லாததால் புதியதாக ஐம்பொன்னால் விநாயகர் சிலை செய்யப்பட்டது. புதிய சிலைக்கு சிறப்பு யாகம், அபிஷேக தீபாராதனை நடந்தது.தொடர்ந்து விநாயகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்தார்.