மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் - சிறுமுகை ரோட்டிலிருந்து இரண்டு கி. மீ., தொலைவில் குத்தாரிபாளையம் உள்ளது.இங்கு இருந்த மாரியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில்கள் மிகவும் பழுதடைந்தது. ஊர் பொது மக்கள் ஒன்றிணைந்து, புதிதாக கட்டும் திருப்பணியை துவக்கினர். இரு கோவிலிலும் முன் மண்டபம் மற்றும் கோபுரம் ஆகியவை கட்டப்பட்டது. இதன் மகா கும்பாபிஷேக விழா, நேற்று முன் தினம் வேள்வியுடன் துவங்கியது.மூன்று யாக வேள்வி பூஜைகள் முடிந்த பின்பு, நேற்று காலை கோபுரங்களுக்கும், சுவாமி சிலைகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோவை சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமி தலைமையில், மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல் ஆகியோர் கும்பாபிஷேகத்தை செய்தனர். இவ்விழாவில் குத்தாரிபாளையம், வெள்ளிப்பாளையம், மோத்தேபாளையம், வீராசாமி நகர், ஆலாங்கொம்பு ஆகிய கிராம மக்கள் பங்கேற்று அம்மன் சுவாமியை வழிபட்டனர்.