குற்றாலம்: கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு குற்றாலத்தில் நேற்று ஏராளமான பெண்கள் சுமங்கலி பூஜையினை மேற்கொண்டனர். கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் குற்றாலத்தில் பெண்கள் சுமங்கலி பூஜை மேற்கொள்வதுண்டு. அதன்படி நேற்று கார்த்திகை சோமாவரம் என்பதால் அதிகாலை நான்கு மணி முதல் குற்றாலம், தென்காசி, செங்கோட்டை, இலஞ்சி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் அதிகாலையிலேயே குற்றாலத்தில் குளித்து விட்டு கோயில் அருகே அமைந்துள்ள செண்பகவிநாயகர் கோயிலில் மஞ்சள் அபிஷேகம் செய்து சுமங்கலி பூஜையினை மேற்கொண்டனர். நேற்று காலை முதல் துவங்கிய சுமங்கலி பூஜை 10 மணி வரை பெண்கள் மேற்கொண்டிருந்தது காண முடிந்தது.கார்த்திகை மாதத்தில் நான்கு சோமவாரத்திலும் இந்த பூஜையினை பெண்கள் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.