சபரிமலை சீசன் ஆரம்பமாகி விட்டது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை யாத்திரை வரத்துவங்கி உள்ளார்கள். இவர்களில் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியை தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஐயப்ப பக்தர்களுக்கு அனந்த பத்மநாபா கோயிலுக்குள் எப்படி செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் தெரிவதில்லை. ஆண் பக்தர்கள் வேஷ்டி மற்றும் துண்டுடன் செல்ல வேண்டும். பெண் பக்தர்கள் சேலை மட்டுமே அணிந்து செல்ல வேண்டும் என்பது கோயிலின் நடைமுறை. வேஷ்டி மற்றும் சேலை கொண்டு வராத பக்தர்கள் கோயில் அருகில் வாடகைக்கு கிடைக்கும் வேஷ்டி மற்றும் சேலையை அணிந்து கொண்டு தரிசனம் செய்ய செல்லாம். (ஒரு வேட்டி அல்லது சேலைக்கான வாடகை ரூ 20 மட்டுமே. பக்தர்கள் அதிக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.) அத்துடன் இவர்கள் கொண்டுவரும் மொபைல் போன், ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி, கேமரா ஆகியவற்றை கோயிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லாததால், கோயில் அருகில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து செல்வது நல்லது.
அனந்தபத்மநாப சுவாமி தரிசன நேரம்: காலை 4 முதல் 5 மணி, 6.30 முதல் 7 மணி, 8.30 முதல் 10 மணி, 10.30 முதல் 11 மணி, 11.45 முதல் 12 மணி, மாலை 5 முதல் 6 மணி, 6.45 முதல் 7.30 மணி, 8.30 மணி,
இரவு 8.30 மணி தரிசனத்திற்கு மட்டும் சிறப்பு கட்டணம் நபர் ஒன்றுக்கு.. ரூ 20. மற்ற நேரங்களில் உள்ள தரிசனம் அனைத்தும் இலவசம்.