மங்கலம்பேட்டை: முகாசபரூர் கோரக்கர் சித்தர் ஜீவசமாதியில் நடந்த குருபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவிலில் உள்ள கோரக்கர் சித்தர் ஜீவசமாதியில், ஆண்டுதோறும் கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தின்போது குருபூஜை விழா நடப்பது வழக்கம். நேற்று பரணி நட்சத்திரத்தையொட்டி கோரக்கர் சித்தர் ஜீவ சமாதியில் குருபூஜை விழா காலை 9:00 மணியளவில் சிறப்பு ஹோம பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனை, 10:30 மணிக்கு குருபூஜை, பகல் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு சிறப்பு ஹோமம், அபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.