மேல்மருவத்தூர்: ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெறும் தைப்பூச விழாவுக்கு காஞ்சிபுரம் செவ்வாடை பக்தர்கள் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூச திருவிழாவும் ஒன்று. காஞ்சிபுரத்தில் சக்தி மாலை அணிந்து, சக்தி விரதம் தொடங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கலச விளக்கு பூஜை, பஞ்ச பூத வழிபாடுகளுடன் விழா தொடங்கியது.