வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சங்காபிஷேக சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2013 11:11
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, சிவபெருமானுக்கு சங்காபிஷேக சிறப்பு பூஜை நடந்தது. கார்த்திகை மாதம் துவங்கிய பின்னர், சோமவாரத்தையொட்டி ஒவ்வொரு திங்கள் கிழமையும் சிவன் கோவில்களில் சங்காபிஷேக பூஜை நடக்கிறது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டாவது திங்கள் கிழமையான நேற்று மாலை 6.00 மணிக்கு சங்காபிஷேக விழாவையொட்டி காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் முன்பு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக சிவபெருமானுக்கு சிறப்பு யாக பூஜையும், அபிஷேக பூஜையும் நடந்தன. விழாவையொட்டி காசிவிஸ்வநாதர் ஆலயத்தின் முன்பு நெல்லின் மேல் 108 சங்கு மற்றும் தாமரை இதழ்களால் அமைக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு யாகபூஜை நடந்தது. இதில், வால்பாறை மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.