பதிவு செய்த நாள்
26
நவ
2013
11:11
திருப்பூர்: திருப்பூர் ஐயப்பன் கோவிலில் நேற்று பறையெடுப்பு நடந்தது. திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில், மண்டல கால பூஜை மற்றும் ஆறாட்டு உற்சவ பூஜை, கடந்த 17ம் தேதி துவங்கியது. நேற்று காலை 10.00 மணிக்கு நவ கலச அபிஷேகம், உற்சவ பலி பூஜை நடந்தது. இரவு 8.00 மணிக்கு பறையெடுப்பு, தாயம்பகை மேளம் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 10.00 மணிக்கு, நவகலச அபிஷேகம், இரவு 7.00 மணிக்கு பறையெடுப்பு, இரவு 10.00 மணிக்கு பள்ளி வேட்டை நடக்கிறது. நாளை காலை 9.00 மணிக்கு, சுவாமி ஐயப்பன் பவானி புறப்படுதல், 11.00 மணிக்கு, பவானி கூடுதுறையில் ஆறாட்டு உற்சவம், அன்னதானம் நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு, பஞ்சவாத்தியத்துடன் ஊர்வலம், திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் இருந்து துவங்குகிறது. பெருமாள் கோவில், மாநகராட்சி ரோடு, குமரன் ரோடு வழியாக ஊர்வலம் சென்று, டவுன் ஹால் மைதானத்தில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், ஊர்வலம் கோவிலை அடையும்.