கிருமாம்பாக்கம்: நாணமேடு சொர்ண கர்ஷண பைரவர் கோவிலில், ஏகாதச ருத்ர ஹோமம் நேற்று நடந்தது. தவளக்குப்பம் அடுத்த நாணமேடு சொர்ண பைரவி சமேத, விஜய ஆனந்த கோலாகல, சொர்ண கர்ஷண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மகா பைரவாஷ்டமியையொட்டி, ஏகாதச ருத்ர ஹோமம் நேற்று நடந்தது. அதனை முன்னிட்டு, காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை, ஏகாதச ருத்ர பாராயண ஜபஹோமம், அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை முத்து குருக்கள் செய்திருந்தார்.