பதிவு செய்த நாள்
02
டிச
2013
11:12
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சனி மஹாபிரதோஷ வழிபாடு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பவானி கூடுதுறை ஸ்ரீவேதநாயகி உடனமர் ஸ்ரீசங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு, சனி பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உட்பட பல்வேறு வகையான அபிஷேகமும், நந்தீஸ்வரருக்கு மலர்களால் ஆன சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. பின், வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் உற்சவ மூர்த்திகளுடன், பக்தர்கள், கோவிலை, மூன்று முறை மேலதாளங்களுடன் வலம் வந்தனர். பவானி, குமாரபாளையம், காலிங்கராயன்பாளையம் உட்பட பல பகுதியை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், பவானி சின்னகோவில் என்று அழைக்கப்படும் காவிரி வீதியில் உள்ள விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.