பதிவு செய்த நாள்
03
டிச
2013
11:12
சேலம்: சேலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில், பிரம்மோற்சவ விழா துவங்கியது. சேலம், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில், நேற்று அலர்மேல் மங்கை பத்மாவதி தாயாருக்கு, பத்தாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா துவங்கியது. காலை, 10.30 மணிக்கு ஹோமம் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பூர்ணாகுதி, வேதபாராயணம், அருளிச்செயல்கள் நிகழ்ச்சி நடந்தது. திருமஞ்சனம், திருவாதாரனம், சாற்றுமுறை, பிரசாத விநியோகம் நடந்தது. மாலை, 6 மணிக்கு கோமாதா பூஜை நடந்தது. தொடர்ந்து, இசை நிகழ்ச்சி நடந்தது. இரவு, 10 மணிக்கு கண்ணாடி மாளிகை சேவை நடந்தது. இன்று காலை, 9.30 மணிக்கு மகாலட்சுமி அலங்காரத்தில், தாயார் காட்சி அளிக்கிறார். மாலை, 6.30 மணிக்கு பத்ரி நாராயணன் அலங்காரத்தில் காட்சி தருகிறார். நாளை மாலை, 6.30 மணிக்கு தாயார் கருட சேவையில் காட்சி தருவார். 5ம் தேதி மதியம், 3 மணிக்கு கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, பெருமாளுடன், தாயார் சேர்த்தி சேவையில் காட்சி தருவார். 6ம் தேதி காலை, 11 மணிக்கு, 81 கலச திருமஞ்சன அபிஷேகம் நடக்கிறது. வரும், 7ம் தேதி மகாலட்சுமி அலங்காரத்தில், காலை, 11 மணிக்கு பூ பல்லக்கில் தாயார் உள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6 மணிக்கு தாயார், மோகினி அலங்காரத்தில், ஊஞ்சலில் எழுந்தருளி காட்சி தருகிறார். தொடர்ந்து, 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது. 8ம் தேதி காலை, 11 மணிக்கு புஷ்பயாகம், 12 மணிக்கு திருப்பாவாடை நிகழ்ச்சி நடக்கிறது.