பதிவு செய்த நாள்
09
டிச
2013
10:12
ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் ஐயப்பன் கோவில், 6ம் ஆண்டு விழா நடந்தது. அதிகாலை, 5 மணிக்கு கணபதி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனையும், ஸ்வாமிக்கு, 108 சங்காபிஷேகமும், சிறப்பு அலங்காரத்துடன் நெய், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு பிரத்தியங்கரா தேவி, சரபேஸ்வரர் வேள்வி நடத்தப்பட்டது. பக்தர்கள் வேள்விக்காக மிளகாய், நெய் வழங்கினர்கள். ஏற்பாடுகளை தர்மசசாஸ்தா அறக்கட்டளை தலைவர் முருகேசன், தங்கமுருகன், ராஜி, முனிரத்தினம் ஆகியோர் செய்திருந்தனர்.