பதிவு செய்த நாள்
09
டிச
2013
05:12
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி புயலில் அழிந்து போன விநாயகர் கோயிலில் உள்ள சுண்ணாம்பு, செங்கல் கல்லை பெயர்த்து எடுப்பதால், வரலாறு சின்னம் அழியும் அபாயம் உள்ளது. கடந்த 1964ல் ஏற்பட்ட புயலில், வணிக நகரமான தனுஷ்கோடி அழிந்தது, ஆயிரம் உயிர்களை பறித்த அச்சம்பவம், தேசிய பேரிழப்பாகும். ஆனால் இங்கிருந்த மாதா சர்ச், ரயில்வே ஸ்டேஷன், தங்கும் விடுதி, விநாயகர் கோயில் புயலில் சேதமடைந்தன. புயலில் அழிந்த இவை, இன்னமும் வரலாற்று சின்னமாகவும் விளங்குகின்றன. ஆனால், இங்கு வசிக்கும் மக்கள் வீடு, கடைக்கு தரை தளம் அமைக்க, உருக்லைந்த விநாயர் கோயிலில் உள்ள சுட்ட சுண்ணாம்பு கல், செங்கற்களை பெயர்த்து எடுத்து செல்கின்றனர். கோர புயலில் தாக்கு பிடித்த கட்டடம், மனித தாக்குதலில் இருந்து தப்பிக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் தாசில்தார் மீனாட்சி கூறியதாவது: தனுஷ்கோடி புயலில் சேதமடைந்த கட்டடத்தில் இருந்து, கற்களை உடைத்து எடுப்பதாக புகார் வரவில்லை. வருவாய் ஆய்வாளரை தனுஷ்கோடிக்கு அனுப்பி ஆய்வு செய்து, கற்கள் உடைத்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.