பதிவு செய்த நாள்
10
டிச
2013
10:12
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழா இன்று இரவு காப்புகட்டுடன்துவங்கியது. மங்களநாதர் சுவாமி கோயிலில் ,வினாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகபாஜனம், குரு பூஜை,நவக்கிரக பூஜை,பூமி பூஜை நடத்தப்பட்டு, யாகசாலையில் பாலிகை ஸ்தாபனம் செய்யப்பட்டு காப்பு கட்டு நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து தீபாராதனை நடத்தப்பட்டு,பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். டிச., 17ல் நடராஜர் சுவாமிக்கு சந்தனக்காப்பு கலைப்பு,ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
சங்காபிஷேகம்:கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கள் கிழமையை முன்னிட்டு நேற்று மங்களநாதசுவாமி கோயிலில், 108 சங்காபிஷேகம் நடந்தது. சங்குகளில் புனித நீர் ஊற்றி கணபதி ஹோமம் நடத்தப்பட்டு,புனித நீர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.திவான் மகேந்திரன்,நிர்வாக அலுவலர் சுவாமிநாதன்,பேஷ்கார் ஸ்ரீதர் ஏற்பாடுகளை செய்தனர்.