பதிவு செய்த நாள்
10
டிச
2013
10:12
கோவை: கர்நாடக மாநிலம் சிக்மங்களூரிலுள்ள, ஹரிஹரபுரத்தில், ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது ஆதிசங்கராச்சார்ய சாரதா நரசிம்ம பீடம்; இம்மடத்தின் 25வது பீடாதிபதியாக ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி சுவாமி இருந்து வருகிறார். இவர் சாத்மீக சமாஜம் நிறுவுவதற்காக, கோவையில் தர்மபிரசாரம் மேற்கொள்கிறார். டிச.,11ல் கோவை வரும் சுவாமிக்கு, ராம்நகர் கோதண்டராமசுவாமி கோவிலில் பூரணகும்ப மரியாதை செய்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. 14ம் தேதி வரை ராமர் கோவிலில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். டிச.,15, 16 தேதிகளில் சாய்பாபா காலனி, ஸ்ரீ சக்திதாமில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். 17ம் தேதி புலியகுளம் விக்னேஷ் மஹாலில் பக்தர்களை சந்தித்து ஆசி வழங்குகிறார். அவர் வருகை தரும் பகுதிகளில் காலை 7.30 முதல் 8.30 மணி வரை சந்திரமவுலீஸ்வரர், ஸ்ரீசக்கரபூஜை நடக்கிறது; காலை 9.30 முதல் 10.30 வரை சுவாமி தரிசனம், தீர்த்தப்பிரசாதம், மந்திராட்ஷதை, மாலை 6.30 மணி முதல் ஸ்ரீசக்கர நவாவர்ணபூஜை நடத்தப்படுகிறது. சிவதீட்சை குறித்த உபதேசம் டிச.,15 காலை 10.30 மணி முதல் 12.00 வரை சாய்பாபா காலனி, ஸ்ரீசக்திதாமில் நடைபெறுகிறது.