நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை விழாகொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2013 10:12
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.சுவாமி நெல்லையப்பர் கோயிலில் திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. விழாவில் சுவாமி கோயில் இரண்டாம் பிரகாரத்தில் பெரிய சபாபதி மண்டபத்தில் தினந்தோறும் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் திருவெம்பாவை வழிபாடு நடக்கிறது. தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நான்காம் நாளான 12ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷிப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வருகின்றனர். 17ம் தேதி சுவாமி கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தாமிர சபையில் இரவு நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு விழா மற்றும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. திருவாதிரை விழாவான 18ம் தேதி அதிகாலை 3 மணிக்கு பசு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து தாமிரசபையில் காலை 3.45 மணி முதல் 4.30 மணி வரை நடராஜர் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.