பதிவு செய்த நாள்
11
டிச
2013
10:12
பாகூர்: கார்த்திகை மாத நான்காவது சோமவாரத்தை முன்னிட்டு, பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் ருத்ராபிஷேம் நடந்தது. சோமவாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு, மூலநாதர் சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதனைதொடர்ந்து, மரிக்கொழுந்து, வில்வம், வன்னி இலைகளால் 308 முறை சிவார்ச்சனை செய்து, 11 முறை ருத்ர பாராயணம், வேதாம்பிகை அம்மனுக்கு ஸ்ரீசூக்தம், சகஸ்கரநாம அர்ச்சனை மற்றும் ருத்ர யாகம் நடந்தது. இரவு 9.00 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.