மதுரை: மதுரை அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில், ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. எல்லீஸ்நகர் வாகன காப்பகத்தில், வாகனங்கள் நிறுத்தும் பக்தர்களுக்கு, ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அன்னதானம், குடிநீர் ஜன., 20 வரை வழங்கப்படுகிறது. சங்க நிர்வாகிகள் மனோகரன், ஜெயராமன், ஆனந்த் ஆகியோர் இங்கு செயல்படும் தகவல் மையத்துடன் இணைந்து ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.