பதிவு செய்த நாள்
17
டிச
2013
10:12
சென்னை: சென்னையில் உள்ள பிரதான சிவாலயங்களில், நாளை, ஆருத்ரா தரிசனம் எனும், நடராஜர் திருவாதிரை திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், திருவாதிரை நட்சத்திரம் அன்று, சிவாலயங்களில், ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை, நடராஜர் திருவாதிரை திருவிழா, சென்னை நகரில் உள்ள சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. சிவன் கோவில்களில்,தொன்மையான மருந்தீசுவரர் கோவிலில் திருவாதிரை திருவிழாவை யொட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், வீதி உலா உற்சவமும் நடக்கிறது. மாலை, 7:00 மணிக்கு தியாகராஜர் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அதே போல், சென்னை யில் உள்ள, பிரதான சிவாலயங்களில், நாளை, ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட உள்ளது.