பதிவு செய்த நாள்
17
டிச
2013
10:12
தி.நகர்: தி.நகரில், பூர்ணா புஷ்களாம்பாள் சமேத ஸ்ரீ தர்மஸாஸ்தா திருக்கல்யாண மகோற்சவம், நடைபெற்றது. சென்னை தி.நகரில் உள்ள காந்திமதி திருமண மண்டபத்தில், ஸ்ரீ புஷ்களா தேவி, ஸ்ரீபூர்ணாதேவி மற்றும் ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு, திருக்கல்யாண மகோற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமமும், மதியம், தீபாராதனையும், மாலை, திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில், அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.