பதிவு செய்த நாள்
19
டிச
2013
10:12
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில்,ஆருத்ரா தரிசனஉற்சவம் நடந்தது.காரைக்கால் திருநள்ளாரில் சனீஸ்வர பகவான் தனிசன்னதியில் அருள்பாலிக்கும், தர்பாரண்யேஸ்வர்கோவில் அமைந்துள்ளது. நேற்று ஆருத்ரா தரிசனத்தையொட்டி, இங்குள்ள நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு 16 விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடத்தப்பட்டது.காலை 11:30 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமிஅம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிகொடுத்தனர். பின், ராஜகோபுர தீபாராதனையுடன்சுவாமிகள் 4 மாட வீதியுலா நடந்தது.வீதியுலா நிகழ்ச்சிமுடிந்து நடராஜர் மற்றும் சிவகாமிஅம்பாளுக்கு பிரம்ம தீர்த்த கரையில் தீர்த்தவாரி நடந்தது. அதனை தொடர்ந்து, சுவாமிகள் கோவிலுக்குசெல்லும் வழியில் ஊடல் உற்சவம் நடைபெற்றது.இதில், அம்பாள், நடராஜர் மீது கோபித்துக் கொண்டுகோவிலுக்குள் சென்று கதவை மூடிக் கொள்வது, பின்சுந்தரமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி அம்பாளுக்கும்,நடராஜருக்கும் சமாதானம் செய்து வைக்கும் ஐதீகம் நடந்தது.சமாதானம் செய்வதற்கான சாமவேதங்கள்பாடப்பட்டது. பின், சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவகாமிஅம்பாளை அழைத்துக் கொண்டு நடராஜரை எதிர்கொண்டு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நடராஜர்,சிவகாமி அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிகழ்ச்சியில் தர்மபுர ஆதீனம் கட்டளை தம்பிரான்சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமிஉட்பட பலர் கலந்து கொண்டனர்.