பதிவு செய்த நாள்
19
டிச
2013
10:12
திருப்பதி: திருமலையில், நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற, வேற்று மத பிரசாரம், பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமலையில், வேற்று மத பிரசாரம், தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில், வாடகை அறைகள் பெறும் தனியார் மடங்களின் அருகில், அடையாளம் தெரியாத சிலர், 10 ரூபாய் நோட்டில், சிலுவைக்குறியிட்டு, கிறிஸ்தவ மத வார்த்தைகளை, ரப்பர் ஸ்டாம்ப் அடித்து, அங்கு வந்தவர்களுக்கு இலவசமாக அளித்துள்ளனர். அந்த, ரூபாய் நோட்டை பெற்ற சில பக்தர்கள், தங்கும் அறை பெற, மடத்தின் மேலாளரிடம், ரூபாய் நோட்டுக்களை அளித்த போது, சிலுவை குறியிட்ட நோட்டுகளையும் அளித்தனர். இதை கண்ட, மடத்தின் மேலாளர், திருமலை, விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு, புகார் அளித்தார். இதை அறிந்த, மத பிரசாரம் செய்தவர்கள், ஓட்டம்பிடித்தனர்.