வள்ளிமலையில் வள்ளியை திருமணம் செய்த பிறகு, முருகப்பெருமான் திருத்தணிக்கு சென்றார். செல்லும் வழியில் அவர் தங்கிய இடமே ஞானமலை ஆகும். சென்னை- வேலூர் ரோட்டில் காவேரிப்பாக்கத்திலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் 14வது கி.மீ., தூரத்தில் உள்ள மங்கலம் என்ற கிராமத்தில் ஞானமலை உள்ளது. தற்போது இவ்வூர் கோவிந்தசேரி என அழைக்கப்படுகிறது.