வள்ளியூர்: வள்ளியூர் செல்வகணபதி கோயிலில் மார்கழி பஜனை வழிபாடு நடந்தது. வள்ளியூர் செல்வகணபதி கோயிலில் மார்கழி பஜனை வழிபாடு தினசரி நடந்து வருகிறது. திருவாதிரையை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு ஆருத்ரா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோபூஜை வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை முருகன் கோயில் அர்ச்சகர் புலவர் அகஸ்தீஸ்வரன் மற்றும் அருணாசலம் ஆகியோர் செய்திருந்தனர்.