ராமநாதபுரம்: ரெகுநாதபுரத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் புதன்கிழமை மண்டல பூஜை விழா காப்புக்கட்டு உற்சவத்துடன் தொடங்கியது. கணபதி பூஜையுடன் தொடங்கிய காப்புக்கட்டு உற்சவத்தின் போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன.டிச. 27ல் பேட்டைத் துள்ளல் நிகழ்ச்சியும், ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.