பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சரக்கு தண்ணீர் லாரி உபயதாரர் மூலம் வழங்கப்பட்டது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கிரிவீதியில் குடிநீர் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த டேங்குகளுக்கு 12000 லிட்டர் தண்ணீர் தினமும் நிரப்பப்பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் பக்தர்களின் பயன்பாட்டுக்காக பல்வேறு இடங்களில் நிழல் பந்தங்களில் தண்ணீர் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கு லாரி மூலமே தண்ணீர் நிரப்பப்படுகிறது இந்நிலையில் தைப்பூச திருவிழாவில் கூடுதலாக தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய மதுரை மீனாட்சி மோட்டார் பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர் ராமசுப்பிரமணிய ராஜா குடும்பத்தாரால் ரூ.12 லட்சத்து 99 ஆயிரத்து 568 மதிப்பிலான தண்ணீர் லாரி வழங்கப்பட்டுள்ளது. இதை கோயில் இணைக் கமிஷனர் மாரிமுத்து பெற்றுக் கொண்டார். கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தண்ணீர் லாரிகளின் எண்ணிக்கை இரண்டாக உள்ளது.