ஸ்ரீ பாலமரத்து கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2026 12:01
அவிநாசி: அவிநாசி அருகே அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ பாலமரத்து கருப்பராயன் சுவாமி, சப்த கன்னிமார், கணபதி, தன்னாசியப்பன், மின்னலடி கருப்பராயர், பொன்னாத்தாள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முன்னதாக, கடந்த, 25ம் தேதி மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. நேற்று காலை, ஸ்ரீ பால மரத்து கருப்பராயர் சுவாமி, மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது