நெட்டப்பாக்கத்தில் உள்ள பல கோவில்களில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2026 12:01
நெட்டப்பாக்கம்: மெளப்பாக்கம் – குச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணியர், முத்தாலம்மன், ரேணுகா பரமேஸ்வரி, அய்யப்பன், துர்க்கை கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் காலை முதல் கால யாக சாலை பூஜை, 2ம் கால யாக பூஜை நடந்தது. மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை, 9:00 மணிக்கு கடம் புறப்பாடு, 9:30 மணிக்கு மூலவர், கற்பக விநாயகர், சிவ சுப்ரமணியர், அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம், 10:00 மணிக்கு ரேணுகாம்பாள், 10:30 மணிக்கு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். மதியம் மகா அபிஷேகம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை மொளப்பாக்கம்–குச்சிப்பாளையம் கிராம மக்கள் செய்திருந்தனர்.