அம்பிளிக்கை: ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை ஸ்ரீசவுடம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
அம்பிளிக்கையில் வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் ஸ்ரீசவுடம்மன்அம்பிகைக்கு புதிதாக கல்ஹார ஆலயம் எனும் கருங்கல்லினால் கர்ப்பக்ருஹம், அர்த்தமண்டபம், மஹா மண்டபம், விமானம் எனும் மூன்று நிலை கோபுரம் கருங்கல்லினால் ஆகம சிற்ப சாஸ்திர முறைப்படி நிர்மாணித்து ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ த்வாரசக்திகள், ஸ்ரீ வீரர் தெய்வங்களுக்கு அரண்மனையாக சாலையில் குண்டம் அமைத்து ஆறுகால யாக பூஜைகளுடன் ஹம்பி ஹேமகூட காயத்ரி பீடாதிபதி தேவாங்கர் குல ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சாமிகள் முன்னிலையில் கங்கா, யமுனா, காவேரி, கோதாவரி உள்ளிட்ட 167 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் கோபுர கலசங்களில் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
சிவஸ்ரீ இரா.மல்லேஸ்வர சாஸ்திரிகள், சிவஸ்ரீ பி.ராஜகணேஷ் சாஸ்திரிகள், சிவஸ்ரீ எஸ்.பி.ரகுநாத சாஸ்திரிகள், சிவஸ்ரீ கே.நாகசுந்தர சாஸ்திரிகள், சிவஸ்ரீ எல். அபிஷேக் சிவம் , நெய்க்காரப்பட்டி ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் அலகு வீரக்குமாரர்கள் கும்பாபிஷேகத்தினை நடத்தினர்.அன்னதானம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை இடத்தின் சொந்தக்காரரான கே.கருப்பணகவுண்டர்- – கருப்பாத்தாள் குடும்பத்தார்கள், ஊர் தலைவர்கள் பி. காளிமுத்து ஊர்பண்ணாடி (ஆந்தைகுலம்), ஆத்தா பி.வீராச்சாமி (ஆந்தைகுலம்), கே.ராசியப்பன்( மணியன்குலம்), கோமாளி எம்.பி.கணேசன்(மணியன்குலம்), கே.சேமலை(செம்பகுலம்), கே.சென்னிமலை (செம்பகுலம்). எம்.எம்.முத்துச்சாமி(காடைகுலம்), எம்.செல்லமுத்து(காடைகுலம்), என்.பி.நடராஜ்(பெரியகுலம்), பி.ரத்தினசாமி(பெரியகுலம்), அம்பிளிக்கை ஊர் மக்கள் செய்திருந்தனர்.