லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நுாற்றாண்டு வைபவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2026 12:01
பெரியகுளம்: லெட்சுமிபுரம் லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நூறு ஆண்டுகளை கொண்டாடும் வகையில் நூற்றாண்டு வைப விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் கம்மவார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நூற்றாண்டு வைபவம் நேற்று நடந்தது.
கோயிலில் தினமும் பூஜைகளும், ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமை உட்பட பல்வேறு விசேஷ நாட்களில் கூடுதல் சிறப்பு பூஜை நடக்கிறது.
பெருமாள் மடியில் லட்சுமி அம்மன் உட்கார்ந்திருப்பது சிறப்புஅம்சமாகும். தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். நூற்றாண்டு வைபவ விழாவை முன்னிட்டு நேற்று யஜமான சங்கல்பம், புண்யாக வாசனம், அக்னி பிரதிஷ்டை, கலச பூஜை, மூலமந்திர ஹோமங்கள், மங்கள பூர்ணாஹூதி உட்பட யாகசால பூஜைகள், லெட்சுமி நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. கோயில் முழுவதும் மலர் அலங்காரம், வண்ண விளக்குகளால் ஜொலித்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உற்ஸவர் வீதி உலாவும், வள்ளி கும்மி ஆட்டம், பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை கிராம நல கமிட்டி பஜனை குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.