முத்துமாரியம்மன் கோவில் பாதியில் நிற்கும் தங்கரத பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2013 12:12
திருவப்பூர்: முத்துமாரியம்மன் கோவிலில் பாதியில் நிற்கும் தங்கரத திருப்பணிகளைத் தொடர்வது குறித்து அறக்கட்டளை மற்றும் கிராமத்தினர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் வருகிற 22ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. முத்துமாரியம்மன் கோவிலுக்கு தங்கரதம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துவந்தனர். இதையடுத்து, கவிநாடு, திருவப்பூர் கிராமத்தினர், புதுக்கோட்டை நகர மக்கள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், முத்துமாரியம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் ஒன்றுசேர்ந்து கோவிலுக்கு தங்கரதம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.