பதிவு செய்த நாள்
23
டிச
2013
11:12
ஊட்டி: ஊட்டி புனித மேரீஸ் தேவாலயம், புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அர்ச்சிப்பு விழா நேற்று நடந்தது. ஊட்டி புனித மேரீஸ் தேவாலயத்தின் 175வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் சமீபத்தில் நடந்தன. இதையொட்டி, தேவாலய பலிபீடம், ஆலய மணி ஆகியவை புதுப்பிக்கப்பட்டு, அதன் அர்ச்சிப்பு விழா நேற்று நடந்தது. ஊட்டி மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில் நடந்த திருப்பலியில், அவை அர்ச்சிக்கப்பட்டன. முன்னதாக, புனிதர் பட்டம் பெறவுள்ள தேவசகாயம் பிள்ளையின் திருப்பண்டத்தை, மறைந்த பேராயர் அருள்தாஸ் ஜேம்சின் தங்கை, பிஷப் அமல்ராஜிடம் வழங்கினார். அந்த திருப்பண்டம், பலிபீடத்தில் பதிக்கப்பட்டு, அர்ச்சிக்கப்பட்டது. திருப்பலியில், மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி, குருக்கள் வில்லியம்ஸ், ஆல்வின், அமல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, பங்கு குருக்கள் ஜான் ஜோசப், இருதய லாரன்ஸ் செய்திருந்தனர்.