பதிவு செய்த நாள்
23
டிச
2013
11:12
கமுதி: கமுதி அருகே பிரச்னைக்குரிய கருமேனியம்மன் கோயிலை, வருவாய் துறையினர் பூட்டி, "சீல் வைத்தனர். கமுதி அருகே மரக்குளம், கொத்தபூக்குளம் மற்றும் சின்ன உடப்பங்குளம் கிராமங்களுக்கு அருகில் கருமேனியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் முதல் மரியாதை மற்றும் சாமி கும்பிடுவது தொடர்பாக மூன்று கிராமத்தினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால், இக்கோயிலில் சாமி கும்பிடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மூன்று கிராமத்தினர் மீதும் மண்டலமாணிக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், பரமக்குடி ஆர்.டி.ஓ குணாளன் தலைமையில் அதிகாரிகள் கிராமத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. நேற்று, கமுதி தாசில்தார் இந்திரவள்ளி, ஆர்.ஐ., ராமசுப்பிரமணி, வி.ஏ.ஓ., மதி, சிறப்பு எஸ்.ஐ., முனியசாமி ஆகியோர் முன்னிலையில் பிரச்னைக்குரிய கருமேனியம்மன் கோயில் கதவு தற்காலிகமாக பூட்டப்பட்டு, "சீல் வைக்கப்பட்டது.