பதிவு செய்த நாள்
23
டிச
2013
11:12
விக்கிரவாண்டி: ஒரத்தூர் தூய பேதுரூ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது.வேலூர் சி.எஸ்.ஐ.,பேராலயம் குரு சேகரம் ஒரத்தூர் பேதுரூ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நடந்த விழாவிற்கு குருசேகர ஆயர் பக்த தியாகராசன் தலைமை தாங்கினார். பின்னர், ஏழை எளியவர், ஆதரவற்ற அனாதை மற்றும் விதவைகள் உள்ளிட்ட 650 பேருக்கு போர்வை, வேட்டி, சேலைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சபை ஊழியர் சாமுவேல், செயலாளர் சேகர், பொருளாளர் சாமிதாஸ், சபை மூப்பர்கள் ஜான் பீட்டர், குணசீலன், இளைஞர்கள் சுதாகர், மித்ரா, மனோசே, ஆரீஸ், பிராங்க்ளின், விமல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.