பதிவு செய்த நாள்
23
டிச
2013
11:12
நாமக்கல்: சிந்தாமணி வல்லப கணபதி கோவிலில், ராதா மாதவ சீதா ராகவ திருக்கல்யாண மஹோத்ஸவ விழா, கோலாலகமாக நடந்தது. நாமக்கல்-மோகனூர் சாலை, மகரிஷி நகரில், சிந்தாமணி வல்லப கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும், ராதா மாதவ சீதா ராகவ திருக்கல்யாண மஹோத்ஸவம், வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, வஸந்த மாதவ பூஜை, ஸ்வாமி பட பிரதிஷ்டை, வெங்கடாஜலபதி பூஜை, தீபாராதனை, பிரசாத வினியோகம் நடந்தது. அதையடுத்து, மாலை, அஷ்டபதிகள் தரங்கம், பஞ்சபதிகள் உத்ஸவ நிகழ்ச்சிகளை, வரதராஜபுரம் ராமபக்த பஜன் மண்டலியார், திருச்சி பகவன் நாம ப்ராசர மண்டலியார் நடத்தி வைத்தனர். நேற்று காலை, 7.30 மணிக்கு, சம்ப்ரதாய உஞ்சவ்ருத்தியும், 9.30 மணிக்கு, ராதா மாதவ சீதா ராகவ திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. பகல், 12.30 மணிக்கு, ஆஞ்சநேயர் உத்ஸவம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். ஏற்பாடுகளை, சிந்தாமணி வல்லப கணபதி ஆலய அறங்காவலர் குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.