பதிவு செய்த நாள்
25
டிச
2013
11:12
சென்னை: சென்னையில் நடந்து வரும், மார்கழி மாத இசை நிகழ்ச்சியான, "சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி, இன்றுடன் நிறைவடைகிறது. லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு, கடந்த எட்டு ஆண்டுகளாக, "சென்னையில் திருவையாறு என்ற பெயரில், மார்கழி மாத இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதன் ஒன்பதாம் ஆண்டு துவக்கவிழா, சென்னையில் உள்ள, காமராஜர் அரங்கத்தில் நடந்தது. நடிகர் கமலஹாசன் விழாவை துவக்கி வைத்தார். எட்டு நாட்கள் நடக்கும் இசை விழாவில், பிரபல கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள், பங்கேற்றனர். இன்று நடக்கும் விழாவில், துக்காராம் கணபதியின் நாமசங்கீர்த்தனம்; சுப்தரா மாரிமுத்து, ஷோபனாவின் பரதநாட்டியம்; மஹதி, கணேஷ், சோபா சந்திரசேகர், பர்வீன் சுல்தானா ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. எட்டாவது நாளான இன்றுடன், "சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சி முடிகிறது.