பதிவு செய்த நாள்
25
டிச
2013
11:12
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில், ஜன., 21 ல் தை உத்திர வருடாபிஷேகம் நடக்கவுள்ளது. இதையொட்டி, பூஜை நேரங்கள் மாற்றப்பட உள்ளது. இக்கோயிலில், வழக்கமாக தினமும் காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடக்கும். தற்போது மார்கழி மாதம் என்பதால் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. வரும் ஜன., 21 தை உத்திர தினமாகும். அன்று மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள் ஆகும். ஆண்டு தோறும் இந்த நாளில் மாற்றப்படும் பூஜை நேரங்கள், இந்தாண்டும் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி, இனி காலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 7:00 மணிக்கு கும்ப கலச பூஜை நடக்கும். கும்ப கலசத்தில் புனித நீர் எடுத்து செல்லப்பட்டு, காலை 8:30 க்கு விமானங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். மாலை 6:00 மணிக்கு குமரவிடங்க பெருமாள், அம்பாளுடன் தங்கமயில் வாகனத்தில் வீதியுலாவும், இரவு 8:00க்கு மூலவருக்கு புஷ்பாஞ்சலியும் நடக்கவுள்ளது. புஷ்பாஞ்சலிக்கு பக்தர்கள் கேந்தி பூ தவிர, மற்ற பூக்களை தானமாக வழங்கலாம், என இணை கமிஷனர் ஞானசேகர் தெரிவித்துள்ளார்.