பதிவு செய்த நாள்
25
டிச
2013
11:12
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஐயப்பசுவாமி கோவிலில், வரும் 27ம் தேதி மண்டல பூஜை திருவிழா நடை பெறுகிறது. பொள்ளாச்சி ஐயப்ப சுவாமி, மஞ்சள் அம்மன் கோவில் மண்டல பூஜை திருவிழா இன்று துவங்குகிறது. இன்று இரவு 7:00 மணிக்கு ஐயப்பா சேவா அணி சார்பில், பரத நாட்டிய கொண்டாட்டம், நாளை (26ம் தேதி) இரவு 7:00 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.வரும் 27ம் தேதி காலை 4:00 மணிக்கு திருமதுர பூஜை; 4:15மணிக்கு மகா கணபதி ஹோமம், 5:00 மணிக்கு ஐயப்பசுவாமிக்கு அபிஷேகம், 6:00 மணிக்கு மஞ்சளம்மனுக்கு பூஜை, 6:30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது. தொடர்ந்து, 10:25மணிக்கு மண்டல பூஜை, மஞ்சளம்மனுக்கு பூஜையும்; 11:15மணிக்கு ஐயப்பசுவாமிக்கு தீபாராதனை, 11:30 மணிக்கு மகேஸ்வர பூஜையும் நடை பெறுகிறது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு மண்டல பூஜை, 6:30 மணிக்கு பஞ்ச வாத்தியத்துடன் புஷ்ப அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஐயப்ப சுவாமி கோவில் நிர்வாகத்தினர், ஐயப்பா சேவா சங்கம், ஐயப்பா சேவா அணியினர் செய்து வருகின்றனர்.