கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் குருசாமி மோகன் தலைமையில் நடந்த மண்டல பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் டிச.,18ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது.நேற்று மண்டல பூஜையையொட்டி காலை 5மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு முதல் கால பூஜை நடந்தது.அதன் பின் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் ரெகுநாதபுரம் முத்து நாச்சியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்றர்.அங்கு நடந்த சிறப்பு பூஜை மற்றும் செற்பொழிவுக்கு பின் ஏராளமானோர் வண்ணக்கலவை பூசி ஐயப்பா முழக்கத்துடன் பேட்டை துள்ளல் துவங்கியது. அலங்காரம் செய்யப்பட்ட வல்லபை ஐயப்பன் உற்சவர் பஸ்மகுளத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து சென்றனர்.அங்கு உற்சவருக்கு 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது. இதை தொடர்ந்து மூலவருக்கு 33 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை, பஜனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.மதியம் 4 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக சுவாமி எழுந்தருளுதல் நடைபெறுகிறது.