பதிவு செய்த நாள்
28
டிச
2013
11:12
மதுரை: சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கோச்சடை சின்மயா மிஷனில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான ஆற்றல் கூட்டும் ஆன்மிகப் பயிற்சி நடந்தது. கோவை சின்மயா மிஷன் ஆச்சாரியா சுவாமி சிவயோகானந்தா, இந்தியன் வங்கி சேவை அதிகாரி ராஜ்குமார், ஐகோர்ட் வக்கீல் இருளப்பன், விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் சின்மயா சோமசுந்தரம் பயிற்சி அளித்தனர். ஆன்மிகப் புத்தகங்கள், பொது அறிவுப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, இந்து மாணவர் சங்க நிர்வாகிகள் ராஜேஷ்குமார், சட்டக் கல்லூரி மாணவர்கள் செல்லத்தேவன், கருப்புசாமி, மாணவர்கள் அஜித்குமார், தவராஜா, இந்துமதி, வைசாலி, சுபஸ்ஸ்ரீ செய்திருந்தனர்.